LIFE REALITIES - உலக வாழ்க்கை உண்மைகள்
FROM SAMPATH’S DESK: உலக வாழ்க்கை உண்மைகள் LIFE REALITIES வாழ்க்கை சிறியது, தற்காலிகமானது - பலரின் மனம் இதை மறுக்கிறது; நான் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பேன் என கொக்கரிக்கிறது; பணமும் செல்வமுமே அனைத்தும் என ஏற்கிறது; மற்றவைகளை தள்ளி வைக்க எண்ணுகிறது; அன்பு, அறம் இவற்றைத் தவிர்க்கிறது! கைகளால் காற்றைத் தடுக்க முடியுமோ? இருட்டால் ஓட்டையை அடைக்க இயலுமோ? பணத்தால் அன்பை வாங்கக் கூடுமோ? பனி பெய்து வெள்ளம் திரளுமோ, பஞ்சம் விடியுமோ? பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமோ? வெற்றியில் அதிகளிப்பு, அதிதுள்ளல், தோல்வியில் துவளல் - தவிர்க்கலாமே; காய் என்பது தோல்வி, கனி என்பது வெற்றி - இது சரியா? ஆனால் காய்கள் கனிகள் இரண்டும் வாழ்க்கைத் தேவைகள் தானே; ஒன்றின் நீட்சி தான் மற்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவோ; இன்பமும் துன்பமும் வாழ்க்கை நாணயத்தின் இருபக்கங்கள் என சொல்லவும் வேண்டுமோ; வாழ்க்கை யதார்த்தங்களை மறைக்க, மறுக்க சாத்தியமோ! கறுப்பு சாபம் என்றால், மனிதத் தலைமுடியை, கருமேகங்களை வ...