VALLALAR

 


 

திருஅருட்பிரகாச வள்ளலார் (5.10.1823-30.1.1874)

(அருட்ப்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை)

 


ஜோதி வழி இறைவழிபாடு கண்டு மகிழ்ந்தவரே;

சமரச சுத்த சன்மார்க்கம்கண்டவரே;

அன்புவழி அருட்களஞ்சியம். திருவருட்பாவை அளித்தவரே;

ஆன்ம நேயஒருமைப்பாட்டை போதித்து வளர்த்தவரே!

 

சித்தர் திருமூல நாயனாரின் அவதாரம் என போற்றப்படுபவரே;

மூர்க்கப் பசிப்பிணியை போக்க அணையாத்தீயை மூட்டியவரே;

அறியாமை அகல ஆன்மீகத்தீயையும் மக்களிடம் உருவாக்கியவரே:

சமூகச் சமநிலை காண அருள்மொழி வழங்கியவரே!

 

ஜீவகாருண்ய ஒழுக்கத்தை பரப்பிய சிகரமே, சத்ய தர்ம சீலரே;

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என பகர்ந்தவரே:

ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என வாழ்ந்து காட்டியவரே;

ஜோதி வடிவாக இறைவனோடு கலந்தவரே!

 

(ரா. சம்பத்)

6/10/2020

Comments

Popular posts from this blog

KAVIGNAR (TAMIL POET) VAALI

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!