THIRUVALLUVAR

சம்பத்தின் DESK-இலிருந்து:

 



தெய்வப்புலவர் திருவள்ளுவர்

 

வாமனனோ  இவ்வுலகை  அளந்ததது  மூவடியில்;

தாங்களோ  அதைச்செய்தது  ஈரடியில்!

 

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை;

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்;

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்!


மானுடம் உய்யுற நீவிர் கண்டது ‘திருக்குறள்’ எனும் பாவாரம்;

உலகப்பொதுமறை மற்றும் வாழ்வியல் தத்துவங்களின் சாரம்;

அறம், பொருள் மற்றும் இன்பத்தின் சாராம்சம்;

என்ன வைத்தீர்கள் நீங்கள் மீதம்.

 

 

திருக்குறளின் மறு பெயர்கள் - முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை;

பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நின் வேதம் வாழ்வியலின் உயிரோவியம்;

வாழ்வு நீரோட்டத்தின் மதிப்பற்ற உன்னத காவியம்;

 

‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு’

 

யார் படைக்ககூடும் இந்தச் சிற்றுரை போலிருக்கும் மிகப்பேருரை;

தேவையில்லை இதற்கு ஒரு பொழிப்புரை;

குறளே ஒரு மாபெரும் பொருளுரை;

இம்மைக்கும் மறுமைக்கும் அருளுரை!

 

அறிந்த சிற்றமிழில் செய்தேன் என்னாலான இந்த புகழோவியம்.

வாழும் நிந்தன் திருக்குறளும் நின் புகழும் - இந்த வையம் உள்ள வரை!

 

(ரா.சம்பத்)

11/8/2020


Comments

Popular posts from this blog

KAVIGNAR (TAMIL POET) VAALI

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!