KANNADASAN

 From Sampath’s Desk:

 


  

கவியரசு கண்ணதாசன்

(24 ஜூன் 1927 – 17 அக்டோபர் 1981)

 

கவியரசு கண்ணதாசனின் தமிழ்க்கவி ஆளுமை;

அவர் தம் நளின அறிவுசார் சொல்லாண்மை;

எளிமையும் இனிமையும் கலந்த சொல் வன்மை;

அவை கண்டு வியந்ததே இப்புவி அது உண்மை!

 

தெளிந்த நீரோடை போல் நின் கவிநடை;

உன்னிடத்தில் இருந்த சொற்ப்படை;

நீவிர் தமிழுலகத்திற்களித்திட்டக் கவிக்கொடை;

இடுக்கண் மழைக்கு ஒரு குடை!

 

காதல், இன்பம், துன்பம், தத்துவம் தோய்ந்த நின் பாடல்கள்;

நீவிர் செய்த கவித்திருவிளையாடல்கள்;

கண்டு மயங்கினோமே நாங்கள்;

நன்றி சொல்ல எங்களுக்கில்லை சொற்க்கள்!

 

அனுபவம் மிளிரும் நின் கருத்துக்கள்;

அவைகளை நீர் அளித்த பாங்குகள்;

என்றும் ஒயாத கடல் அலைகள்;

இன்றுவரை நிமிர்ந்து நிற்கும் பாமலைகள்!

 

ஆன்மீக உலகுக்கு பல பாக்கள் அருளிச்செய்தாய்;

பா ரதத்தில் இப்பூவுலகில் பவனி வந்தாய்;

இவ்வவனியில் கவிமழை பொழிந்தாய்;

பல சொல்நயங்கள் காண்பித்து சிறந்தாய்!

 

இறை இசைவின்றி ஓர் அசைவும் இல்லையென உணர்ந்தாய்;

அவனை கொண்டாட பலப்பாடல்கள் படைத்து மகிழ்ந்தாய்;

அர்த்தமுள்ள இந்து மதம் என போற்றினாய்;

இறையன்பை உயிர் மூச்சாய் கொண்டாடினாய்;

கிருஷ்ணகானம் பாடி நீங்காப்புகழுடன் இவ்வுலகிலிருந்து நீங்கினாய்!

 

 

நின் புகழ் வாழிய வாழியவே!

 

(ரா.சம்பத்)

20/10/2021

Comments

  1. கவியரசர் கண்ணதாசன் பற்றிய அருமையான கவிதை . நான் போற்றும் ஓர் உன்னத கவிஞர்

    ReplyDelete
  2. ஆஹா அருமை. இன்னொரு தமிழ் கவிஞர் பிறந்து விட்டார். இன்னும் தமிழில் நிறைய எழுதுங்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சி. 👏👏👏👏👍👍👍👍👌👌👌👌🌹💐🙏💐🌹💐

    ஜெயந்தி ரமணி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

KAVIGNAR (TAMIL POET) VAALI

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!