JASMINE (மல்லிகை)
சம்பத் DESK-கிலிருந்து:
JASMINE (மல்லிகை)
மந்திர மலர் மல்லிகை;
மலையில் மலர்ந்த மல்லிகை;
மாலையிலும் மலரும் மல்லிகை;
மதுரை மண் மல்லிகை;
மணம் மங்கா மல்லிகை;
மனம் மயக்கும் மல்லிகை;
மகளிர் மகிழும் மல்லிகை;
மறுமலர்ச்சியின் மறுபெயர் மல்லிகை;
மங்கையரின் மாறாக்காதல் மல்லிகை;
மலைப்பின் மடியில் மல்லிகை;
மகிழ்ச்சி மரம் மல்லிகை;
மழுங்க மறுக்கும் மல்லிகை;
மக்கினாலும் மறையா மல்லிகை;
மருத்துவ மாநாட்டிலும் மல்லிகை;
மாநிலம் மருங்கிலும் மல்லிகை;
மயங்கா மனிதருண்டோ மல்லிகைக்கு!
(ரா. சம்பத்)
17/5/2023
அழகான,அருமையான மல்லிகை கவிதை. தங்களின் தமிழ் தரம் கண்டு வியந்தேன். தமிழ் கொஞ்சி விளையாடுகிறது தங்கள் கவிதையில். மற்ற மொழிகளில் தங்களின் தனி திறமை கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். தங்களின் தமிழ் அற்புதம். தங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
அன்னபூரணி
நங்கநல்லூர்