TINY TOTS IMPART LESSONS (குறு குழந்தைகள் புகட்டும் பாடங்கள்)
சம்பத் DESK-கிலிருந்து:
TINY TOTS IMPART LESSONS
(குறு குழந்தைகள் புகட்டும் பாடங்கள்)
பள்ளிப் படிப்பு பருவம் எட்டவில்லை;
எனினும் பாடம் புகட்ட கிளம்பிய மழலையர்.
விளை நிலம் கண்டதில்லை;
எனினும் வாழ்க்கை விதையை விதைக்க விரும்பும் அரும்புகள்.
தத்தித்தத்தி சிலர்;
தாவித்தாவி சிலர்;
நீந்திய வண்ணம் சிலர்;
குதித்து குதித்து சிலர்;
அருமையாக ஆடிய வண்ணம் சிலர்;
நிலத்தை சுவைத்தபடி சிலர்;
ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து ஜாம் ஜாம் என்று சிலர்;
சருக்கி சருக்கி விளையாடும் சிலர்;
நடந்தும், நடனமாடியும் சிலர்;
வாழ்க்கை ஜாலி ஜாலி என்று சொல்லாமல் உணர்த்தும் சிலர்;
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியதோ மிகப்பலரை!
(ரா.சம்பத்)
31/5/2023
Comments
Post a Comment