வாழ்க்கை - ஒர் அலசல் - LIFE - AN ANALYSIS

 FROM SAMPATH’S DESK:

 சம்பத் டெஸ்க்-கிலிருந்து:









 

வாழ்க்கை - ஒர் அலசல்


LIFE - AN ANALYSIS

 

 

கீழிருந்து மேலே செல்லும் கண்களுகக்கெட்டா நீராவிகள்;

மேலே சென்றதும் கைகளுக்கெட்டா மேகங்கள்;

மீண்டும் கீழே வந்ததோ கைகளில் மழைத்துளிகள்;

இது தான் இயற்கையின் யதார்த்தங்கள்!


 

பசியென்று ஒன்று வரும்;

உணவென்ற ஒன்றால் அது தீரும்;

தாகம் என்ற ஒன்று அடிக்கடி படரும்;

நீரின் உதவியால் அது அகலும்!

(ஆனால் இவ்விரண்டுமே தற்காலிகமானதே!)


 

இன்பம் வரும்போது மனம் மிளிரும்;

துன்பத்திற்கு அதுவே வாடும்;

என்ன வாழ்க்கை இது என்று உள்ளம் புலம்பும், உளரும்;

அது தான் வாழ்க்கைத்தத்துவம் என மனசாட்சி பகரும்!


 

உறவுகள் ஆலமர விழுதுகள்;

அவைகளின் ஆழங்கள் ஆணிவேர்கள்;

ஆம், அவை ஆயிரங்காலத்துப் பயிர்கள்;

உளமார்ந்த நட்புகளும் உறவுகள்;

அவற்றையும் நன்றாக பேணி வளருங்கள்!


 

வாழ்க்கை அருமை என்பார் பலர்;

அதுவே துயரம் என்பார் சிலர்;

சொல்லலாமா, வாழ்க்கை ஒரு மலர்?

எனினும் உண்மை விளக்கம் கண்டவர் இலர்!


 

சரியான விதைகளை விதையுங்கள்;

கனியாத மனங்கள் காய்கள்;

கனிந்த உள்ளங்கள் பழங்கள்;

ஏன் எதிர்மறை எண்ணங்கள்?

சிறக்கட்டும் வாழ்க்கைப் பணிகள்!


 

 

(ரா. சம்பத்)

14/7/2023

Comments

Popular posts from this blog

KAVIGNAR (TAMIL POET) VAALI

Sir C.V. RAMAN

SRI RAGHAVENDRAR - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மகிமைகள்