LIFE JOURNEY/LESSONS - வாழ்க்கைப் பயணம்/பாடங்கள்
FROM SAMPATH’S DESK:
வாழ்க்கைப்
பயணம்/பாடங்கள்
LIFE JOURNEY/LESSONS
எங்கிருந்து
வந்தோம், தெரியவில்லை;
ஏன்
அன்னை மடியில் வீழ்ந்தோம், அறியவில்லை;
எப்படி
நடக்க கற்றோம், புரியவில்லை;
வாழ்க்கைப் பயணம் எதை நோக்கி,
விவரமில்லை!
கல்வி கற்கச் சொன்னார்கள், எதற்காக?
பள்ளி கல்லூரிகள் ஏறி இறங்கினோம்
அதற்காக;
புத்தக மூட்டைகளை சுமப்பதற்காக;
என்ன எடுத்து வந்தோம் பிரதிபலனாக?
அன்பிற்கு இணையில்லை என்கிறார்கள்;
அறிவின்றி அமையாது உலகு என்றும்
சொல்கிறார்கள்;
அன்பு சிறந்ததா, அறிவு சிறந்ததா
என கேட்கிறார்கள்;
இரண்டும் கலந்த கலவை தானே கொடுக்கும்
ஏற்றங்கள்!
வாழ்க்கைப் பாதை வாடிக்கைகள்
- வழிநெடுக புதர்கள், முட்கள்;
கற்கள், சருக்கல்கள், வழுக்கல்கள்;
எப்படி சமாளிக்கிறோம் என்பது
அல்ல கேள்விகள்;
இலக்கை அடைவது தான் வசந்த காலங்கள்!
நல்லெண்ணம், நேர்மை, நாணயம்,
நீதி - வாழ்க்கை ஒழுக்கங்கள்;
கருணை, ஈகை, விருந்தோம்பல்,
இடுக்கண் களைதல் - இவை நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்கள்;
நற்சொல், நற்செயல், நல்ல மனிதனின்
அடையாளங்கள்;
இவற்றைப் பேணிக் காப்பதே மனிதநேயத்தின்
செழுமைகள்!
வெற்றி கண்டு களிப்புகள்;
தோல்வியில் ஏமாற்றங்கள், துவளல்கள்;
வெற்றியை இதயத்தில் ஏற்றுங்கள்;
தோல்விகளை தூக்கி எறியுங்கள்!
காலத்தின் அருமையை
மறக்காதீர்கள் ;
மண்ணின் மணத்தையும், மாண்புகளையும் பேணுங்கள்;
இவை வாழ்க்கைப் பயண வண்ணங்கள்.
ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடம்
என எண்ணுங்கள்;
அனுபவங்கள் அனைத்தும் ஆசான்
என உணருங்கள்;
நம்பிக்கையை கை விடாமல் தொடருங்கள்;
வாழ்க்கைப் பயணத்தை இனிதாக்குங்கள்!
ரா. சம்பத்
7/3/2025
அருமை, அருமை தமிழும் நின் தூரிகையில் நின்று விளையாடுகிறது.
ReplyDeleteவாழ்த்துகள்.
தொடரட்டும் தமிழ்த் தாய்க்கு உன் காணிக்கை.
ஜெயந்தி ரமணியின் பின்னூட்டம்.
ReplyDelete