SRI RAGHAVENDRAR - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மகிமைகள்
FROM SAMPATH’S DESK:
ஸ்ரீ ராகவேந்திரர் துணை
இஃது எங்கள்
ஆன்மீக குரு மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் உபாசகி
திருமதி
பத்மா வைத்தியநாதன் அவர்கள், ஸ்வாமிகளின்
மகிமைகள்
பற்றி சங்கரா தொலைக்காட்சியில்
செய்த உரையாடல் பற்றிய
எமது பின்னூட்டம்
அறிவு செறிந்த ஒரு உரையாடல்;
ஆலமரம் போல் பரந்து விரிந்த ஆன்மீகப் பகிர்வுகள்;
இடுக்கண்களையும், இன்னல்களையும் களையும் ஸ்ரீ
ராகவேந்திரரின் மகிமைகள்;
ஈர்ப்பு சக்தி உள்ள ஒரு கணீர் குரலில்;
உண்மைகளை, யதார்த்தங்களை பகரும் பாங்கு;
ஊரெங்கும் இது தான் இப்போது பேச்சு;
எப்படி சாத்தியம் ஆச்சு என எல்லோர் மனதிலும்
ஒரு வீச்சு;
ஏற்றமிகு வாழ்க்கைக்கு ஸ்வாமிகளின் பரிகாரப்
பகிர்வு;
ஐயமின்றி சொல்வேன் இவைகள் கடவுளின் நல்வாக்கு;
ஒவ்வொரு வார்த்தையிலும் கனிவு மற்றும் கருணை தோய்ந்த
தெய்வத்தின் குரல்;
ஓங்கி வளரட்டும் உங்கள் நல்லெண்ணங்கள், நற்செயல்கள்;
அஃதே பத்மா வைத்தியநாதன் அவர்களின் மாண்பு!
ரா.சம்பத்
12/3/2025
Comments
Post a Comment