NEW MEANING TO PROVERBS - பழமொழிகளுக்குப் புதுப்புது அர்த்தங்கள்

 FROM SAMPATH’S DESK:

 



 

பழமொழிகளுக்குப் புதுப்புது அர்த்தங்கள்

NEW MEANING TO PROVERBS

 

 

சுத்தம் சோறு போடும்.

 

அப்படியென்றால், ‘சுத்தம்’ பெரிய Mess வைத்திருக்கிறதா?

 

 

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

 

தம்பி நல்லா மாட்டிக்கிட்டான், ஒரு வழி பண்ணி விடுவாங்க போல.

 

 

சத்துருக்களையும் சித்தமாய் நேசி.

 

சொந்த காசில் சூன்யம் வெச்சுக்கிட்டா  மாதிரி.

 

 

சளி பிடித்ததோ, சனியன் பிடித்ததோ?

 

டாக்டர் தான் சனியனோ!

 

 

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது.

 

இந்த சாதுக்காக் காடையே பெரிசாக்க வேண்டுமா? அங்கே ஏற்கனவே நிறைய சாதுக்கள் (ரிஷிகள்) இருக்கிறார்கள்.

 

 

சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி.

 

Modern Saloons / Beauty Parlours தேவையே இல்லை.

 

 

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான்.

 

இனி மேல் அந்த சங்கை ஊத முடியாது.

 

 

 

சுவருக்கும் காதுகள் உண்டு.

 

காதுகளுக்கும் சுவர் உண்டு.

 

 

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

 

அப்படியே சுத்தாமா ஏமார்ந்து போக வேண்டியது தான்.

 

 

ரா.சம்பத்

21.6.2025

Comments

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

REVISITING MY HALCYON DAYS IN OFFICE

P SUSHEELA