சுதந்திரம் – INDEPENDENCE / FREEDOM – स्वतंत्रता / आज़ादी

 FROM SAMPATH’S DESK:







சுதந்திரம் – INDEPENDENCE / FREEDOM  

स्वतंत्रताआज़ादी

15 August / 15 ஆகஸ்ட்

 

சும்மாவா வந்தது சுதந்திரம்;

அர்பணிப்பு, உயிர்த்தியாகம் அதுதான் வீரம்,;

வந்தே மாதரம்' என்பதே தாரக மந்திரம்;

வேறேதுமில்லை அன்றைய நிலவரம்!

 

சுதந்திரப் போராட்டத்தில், பலருக்கு சிறையே வீடு;

அவர்கள் பட்ட சொல்லொணா பெரும்பாடு;

தன் வாழ்க்கையையே இழந்தவர்களுக்கு ஏது இணை, ஈடு;

இவை ஏதோ புனையப்பட்ட கதை அல்ல, உண்மையின் வெளிப்பாடு!

 

இக்கால இளைஞர்களே, இதை உணருங்கள்;

அடக்குமுறை, கொடுமைகளை சகித்தவர்களை போற்றுங்கள்;

எவ்வளவு விலை கொடுத்து விடுதலை பெற்றோம் என சிந்தியுங்ககள்;

பாரத தேசத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என பெருமைபடுங்கள்!

 

வேற்றுமையில் ஓற்றுமை நம் சிறப்பு;

நமது வேறுபாடுகளே நம்முடைய பலம், குவிவு;

 

இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனைத்தையும் ஈன்ற அனைவரின் புகழை போற்றுங்கள்;

இந்தியாவே நமது முன்னுரிமையென நினையுங்கள்;

இன்று நாம் பெற்றிருக்கும் பெரும் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அவர்கள் தான் என்பதை மறவாதீர்கள்;

அன்று, இளைஞர்களை பாரதம் அழைத்தது விடுதலை வேள்விக்கு; இன்றோ, இந்தியாவை உலக அரங்கில் வளர்ச்சியின் உச்சியில் வைக்க அழைக்கிறது, உழையுங்கள்;

 

இந்தியர் அனைவரும் எல்லாம் பெற விழையுங்கள்; சேவை செய்யுங்கள்;

என்றும், விடுதலை வேள்வியில் வியர்வை, இரத்தம் சிந்திய தியாகிகளின் நாட்டுப்பற்றை நினைவில் போற்றி அரும்பணி ஆற்றுங்கள்;

 

இன்று உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமான இந்தியாவை மூன்றாம் பெரியதாக்க அனைவரும் பாடுபடுவோம்.

 

தேசத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளை முறியடிப்போம்!

 

வந்தே மாதரம்வெல்க பாரதம் – Jai Hind!

 

 

ரா.சம்பத்

20.8.2025

Comments

Popular posts from this blog

KAVIGNAR (TAMIL POET) VAALI

Sir C.V. RAMAN

TONGUE-TWISTER - LITY and RITY Galore