BLISS OF CHILDREN - குழந்தைச் செல்வம்

 FROM SAMPATH’S DESK:



THE BLISS OF CHILDREN

 குழந்தைச் செல்வம்

 

 

குழந்தை பெற்றோர்களுக்கான ஆண்டவனின் வரம்,

அவர்கள் என்றுமே நமக்கு இருந்ததில்லை பாரம்,

நீங்கள் அவர்களுக்கு நீட்ட வேண்டியது உங்களது உதவிக்கரம்,

இடுங்கள் அவர்களில் நல்ல உரம்,

நல்ல படி வளர்ப்பது நமது அறம்!

 

பால் வடியும் இனிய முகம்,

பார்த்துக் கொண்டிருந்தாலே பெரு சுகம்,

மழலை மொழியில், மழையில் நனைந்தாலே மகிழ்ச்சி அதிகம்,

குழந்தைத்தனம் தணியாத தாகம்,

யாராலும் தவிர்க்கவொண்ணா பேரின்பம்!

 

தவழும் அழகை சொல்ல வேண்டியதில்லை,

தத்தி தத்திய நடைக்கு இல்லை எல்லை,

ஆனந்தப் புன்சிரிப்புக்கு ஈடு இணை இல்லை,

விளையாட்டில் அவர்களுக்கு எப்பொழுதும் சோர்வில்லை,

அதைப் பார்க்க நமது களிப்புக்கும் குறைவில்லை!

 

ஆம், மழலையை மீறி உண்டோ ஒரு சங்கீதம்,

அவர் தம் வாழ்வின் கனவுகள் எத்தனையோ விதம்,

சாதிக்க வைக்க நாம் கொடுக்க வேண்டியது உத்தரவாதம்,

நாமிருக்க அவர்களுக்கு நேரக்கூடாது சேதம்,

எப்போதும் அவர்களை அடிக்க வைப்போம் சதம்!

 

அவர்களுக்கு இருப்பது நல்ல உள்ளங்கள்,

பிஞ்சு மனத்தில் பதிய வேண்டியது நல்லெண்ணங்கள்,

அதை அவர்களை அடைய வைய்யுங்கள்,

ஆக்குங்கள் அவர்களை கனி கொடுக்கும் மரங்கள்,

அதுதான் சாலச் சிறந்ததென்று உணருங்கள், நிறைவேற்றுங்கள்!

 

 

 

ரா.சம்பத்

1/6/2025

Comments

  1. ஒரு வீட்டின் சந்தோஷமே குழந்தைகள்தான்.குழந்தைச்செல்வம் பற்றிய உங்கள் கைவண்ணம் மிக அருமை. பாராட்டுக்கள்
    மீனா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

NETAJI SUBASH CHANDRA BOSE

REVISITING MY HALCYON DAYS IN OFFICE

P SUSHEELA