LORD SRI KRISHNA - கண்ணா, கார்மேகவண்ணா
FROM SAMPATH’S DESK:
கண்ணா,
கார்மேகவண்ணா
கண்ணா,
நீ
அவதரித்த
இடம்
ஒரு
சிறைச்சாலை;
வளர்ந்த
கோகுலம்
ஆனது
பூஞ்சோலை;
மேகவண்ணா,
நீ
சென்ற
இடமெல்லாம்
மாறியது
பசி
தீர்க்கும்
பழச்சோலை;
ஆண்ட
துவாரகை
மக்களுக்கான
மகிழ்சிச்சாலை!
வாய்
திறந்து
உலகைக்
காட்டிய
மாயம்
அதிசய
மயம்;
இந்திரன்
கோபத்தால்
பெய்த
பெரு
மழையிலிருந்து கோகுல
மக்களை
காக்க,
கோவர்த்தனகிரியை தன்
சுண்டு
விரலால்
குடையாகப்
பிடித்தது
ஆச்சரியம்;
நின்
குழந்தைப்பருவ விளையாடல்களும், லீலைகளும்,
அற்புதங்களும் தெய்வசக்தியின் பரிமாணம்;
அழிக்க
வந்த
தீய
சக்திகளை
மாய்த்த
விதம்
பிரம்மாண்டம்!
நீலவண்ணா,
நின்
புல்லாங்குழல் இசையால்
அனைவரையும்
மயக்கினாய்;
நச்சுக்கள்வன் காளியனின்
தலைமீது
நர்த்தனமாடி
அடக்கினாய்;
அநீதி
அக்கிரமங்களை
எதிர்த்து,
பஞ்ச
பாண்டவர்களுக்கு தோள்
கொடுத்தாய்;
மகாபாரதப்போர் முனையில்
அர்ஜுனனுக்குத் தர்மத்தை
போதித்து,
பகவத்
கீதையை
உபதேசித்தாய்;
அது இன்றுவரை நீதி போதனைகளாய் இவ்வுலக மக்களுக்கு திகழ்கிறது ஒரு வழிகாட்டியாய்;
பார்த்தனுக்கு தேர்
ஓட்டி
'பார்த்தசாரதி'
ஆனாய்,
பாரதப்போரை
வெல்ல
உதவினாய்;
கம்சனை
மதுரா
நகருக்குச்
சென்று
வதம்
செய்து,
பெற்றோர்
– தேவகி,
வசுதேவரை
- சிறையிலிருந்து மீட்டாய்!
நின்
பாதங்கள்
சரணம்!
ரா.
சம்பத்
25.4.2026
Comments
Post a Comment