எல்லாம் வல்ல இறைவன் - THE LORD ALMIGHTY
FROM
SAMPATH’S DESK:
எல்லாம் வல்ல இறைவன்
THE LORD
ALMIGHTY
கடவுளே, நின் படைப்புகள் எண்ணிலடங்கா;
காணுமிடமெங்கும், நின் கைவண்ணத்தின் அழகு வர்ணனையிலடங்கா;
மனிதப்படைப்பு மாமகுடம், சிறப்பு சொல்லிலடங்கா;
அனைத்து உயிர்களின் பாதுகாப்புக் காவலன் நீ, நின்
கருணை அளப்பிலடங்கா!
எல்லாப் படைப்புக்களின் மூலம் நீக்கமற நிறைந்திருக்கிறாய்;
ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வைத்திருக்கிறாய்;
எல்லோரும் நல்வாழ்வு வாழ வழிவகைகள் வகுத்திருக்கிறாய்;
நல்லவர்களுக்கும்,
பக்தர்களுக்கும் துணை நிற்கிறாய்!
ஆண்டவனே, நீ அழகே உருவானவன் தானே?
உருவ வழிபாடு, உன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கத்தானே;
பகுத்தறியும் மனங்களுக்கு அதிக விளக்கம் தேவையில்லைதானே;
அனைவருள்ளும் நீ அடக்கம் தானே;
உணர்ந்த உள்ளங்களுக்கு பாடம் புகட்ட அவசியமில்லைதானே!
ரா. சம்பத்
3/5/2026
Comments
Post a Comment