THE WHEEL OF TIME - காலச்சக்கரம்

 FROM SAMPATH’S DESK:

  


 

THE WHEEL OF TIME - காலச்சக்கரம்

  

காலமும் அலைகளும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை;

மீண்டும் மீண்டும் விழுந்தும் எழுந்து வர மறப்பதில்லை, மறுப்பதில்லை;

நேரத்தை பின்னோக்கி கொண்டு செல்ல அனுமதி இல்லை;

வீணடிப்போர் மீண்டும் நேரத்தைப் பெறுவதில்லை!

 

 

இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரு மணிக்கு சமம் என உணர்வோம்;

எனக்கு நேரம் இல்லை என்பது எனக்கு விருப்பமில்லை எனபதின் மென்மொழி என தெளிவோம்;

நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும், ஒரு நாற்காலியாக அல்ல என அறிவோம்; 

வீணே கடத்திய காலத்தை நினைப்பதை விட நிகழ்காலத்தைப் போற்றி கடமையை செவ்வனே செய்வோம்!

 

 

காலங்கள் மாறும்,  காட்சிகள் மாறும். நாம் மாறாமல் நேர்மையாக உழைப்பது நலம்;

நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது என உணர்ந்தால் நமக்கு பலம்;

உங்கள் நேரம் மிகக் குறைவு. அதை மற்றவரின் வாழ்க்கையை வாழ்ந்து வீணடிக்க வேண்டாம், இது தான் எதார்த்த களம்;

கால நேர அருமை கருதி நடத்துங்கள் வாழ்க்கை ஊர்வலம்!

 

நாம் நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என வரையறுக்கிறது என்பதை எண்ணித் தெளியுங்கள்;

இன்று தான், நீங்கள் நேற்று கவலைப்பட்ட நாள், என்பதையும் மறக்காதீர்கள்;

கடிகாரத்தைப் பார்த்து என்ன பயன், அது என்ன செய்கிறதோ அதை செய், தொடர்ந்து செல்!

 

 

(ரா. சம்பத்)

23/4/2025

Comments

Popular posts from this blog

KAVIGNAR (TAMIL POET) VAALI

Sir C.V. RAMAN

RABINDRANATH TAGORE