மக்கட்செல்வம் – CHILD IS AN ASSET

FROM SAMPATH’S DESK:

 




 

மக்கட்செல்வம் – CHILD IS AN ASSET

 

 

(தமிழ்ப் பாட்டெழுத ஒரு முயற்சி)

 

 

 

குழந்தைச் செல்வம் இறைவனின் அற்புத வரம்;

 

தலைமுறைகள் தழைத்தோங்க ஓர் ஆலமரம்;

 

வாழையடி வாழை, அதற்கிடுவோம் நல்ல உரம்;

 

குலம் வாழ, வளர, இல்லறத்தின் தொடர் மலர் மற்றும் முத்துச்சரம்!

 

 

 

அன்னைக்கு நிகரில்லை பிள்ளைப் பாசம்;

 

அனுதினமும் அதில் பாசமலரின் வாசம்;

 

 இணையில்லை அவள்தம் நேசம்;

 

 பிள்ளை வளர்ப்பில் இல்லை சமரசம்!

 

 

 

இளர்ந்தளிர் மேனி நமக்கு ஈர்ப்பு;

 

தங்கச்சிலை வார்ப்பு;

 

மழலை மொழி என்றைக்கும் இனிப்பு;

 

வாழ்வில் எல்லையில்லா மகிழ்வு, களிப்பு, சிறப்பு!

 

என்னே ஆண்டவனின் படைப்பு!

 

 

 

தந்தைக்கு அதனால் பெருமை;

 

வாழ்க்கைக்கு ஒரு முழுமை;

 

கடமையிலும் பசுமை;

 

எல்லாமே நன்மை;

 

 

 

பிள்ளை சமூகச் சொத்து;

 

விருந்து, சமயத்தில் மருந்து;

 

எல்லா ஏற்றமும் அதனையே சார்ந்து;

 

நாட்கள் நடக்கும் சிறந்து!

 

 

எங்கும் சுகந்தம், வசந்தம்!

 

ரா. சம்பத்

3/4/2026

Comments

Popular posts from this blog

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

TONGUE-TWISTER - LITY and RITY Galore