GLORY OF WOMEN - மாதரின் மேன்மை

FROM SAMPATH’S DESK:

 



மாதரின் மேன்மை - GLORY OF WOMEN

 

  

மாதர்குலமே, நீவீரின்றி அமையாது இவ்வுலகு;

 

நின் உறவுப் பரிமாணங்கள் தான் எத்தனை எத்தனையோ;

 

உன்னால் தான் ஆனது மனித வாழ்வு அழகு;

 

நீங்கள் வானத்தின் சரிபாதியைத் தாங்கிப்பிடிப்பது பெரும் சிறப்பு!

 

 

 

தாயாக உனது பங்கு அளப்பரியதல்லவா;

 

பிள்ளைகளின்முன்னறி தெய்வம் நீ அல்லவா;

 

அச்சொந்தம் ஈடு இணையில்லாததல்லவா;

 

தியாகங்களின் மொத்த உருவம் நீயின்றி வேறொவர் இருக்கக் கூடுமோ?

 

தன் மக்களின் உயர்வு, முன்னேற்றம் கண்டு யார் அத்தனை பெருமை, மகிழ்சி அடைவாரோ?

 

 

 

உங்களால் தானே நடக்கிறது மனித தலைமுறைகளின் நீட்சி;

 

வாரிசுகளின் மனங்களில் நீ செய்கிறாய் ஆட்சி;

 

உலகமாந்தரே உன் கட்சி;

 

வேறென்ன சொல்ல, காட்சிகளே சாட்சி!

 

 

 

(ரா. சம்பத்)

24.5.2026

Comments

Popular posts from this blog

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

TONGUE-TWISTER - LITY and RITY Galore