FROM SAMPATH’S DESK:
GREAT PEOPLE
Great people have great ideas in STORE;
Still, they listen to others for MORE;
They don't IGNORE,
But EXPLORE -
Points at the CORE;
To SCORE and OUTSCORE;
On scales NEVER-BEFORE;
And solemnly SWORE;
For others' WELFARE;
They don't unnecessarily ROAR;
Yes, they're the real heroes to ADORE!
...............
உயர்ந்தோர்:
உன்னத மனிதர் நெஞ்சினில் என்றும் உயர்ந்த சிந்தனை ஊற்றிருக்கும்!
இருப்பினும் பிறரின் கருத்துக்கும் அங்கே இனிய செவிகள் காத்திருக்கும்!
அலட்சியப் படுத்தி ஒதுக்காமல், அவர்கள் ஆழமாய் அதனை ஆராய்வார்!
மையக் கருத்தை உணர்ந்துகொண்டு, அதன் உண்மைப் பொருளைத் தேடிடுவார்!
அடிநாதம் வரை சென்றடைந்து, அவர்கள் புதிய சாதனைகள் படைத்திடுவர்!
மன்னெப்போதும் கண்டிராத பெருமையைத் தமதாக்கி உயர்ந்திடுவர்!
பிறருடைய நல்வாழ்வு ஒன்றையே, தம் பெரும் குறிக்கோளாய்க் கொண்டிடுவார்!
அதற்காகவே தம்மையே அர்ப்பணிக்க, மனதார உறுதி பூண்டிடுவர்!
ஆரவாரம் செய்து அவர்கள் வீணாக ஆர்ப்பரிக்க மாட்டார்கள்!
அமைதியாய் நன்மைகள் செய்திடுவர்!
ஆம், இவர்களே நாம் என்றும் போற்ற வேண்டிய உண்மையான நாயகர்கள்!
R.SAMPATH
19.10.2026

Comments
Post a Comment